கடல்குளி பெருநாள் என்னும் கடல்குளிப்பு

கடல்குளி பெருநாள் என்னும் கடல்குளிப்பு

 0
கடல்குளி பெருநாள் என்னும் கடல்குளிப்பு
கடல்குளி பெருநாள் என்னும் கடல்குளிப்பு

இன்று புதன்கிழமை. முஸ்லிம்கள் பண்பாட்டு வாழ்வில் இந்த புதன் முக்கியமானது.தமிழ்ப்பண்பாட்டு வாழ்வில் தமிழ் மாதங்களில் சில கிழமைகள் முக்கியத்துவம் பெறுவது இஸ்லாமிய மாதங்களில் ஸபர் எனப்படும் இந்த மாதத்தின் கடைசி புதன்கிழமை முக்கியத்துவம் பெறுகிறது.

 நபி முஹம்மது அவர்கள் கடைசியாக நோய்வாய்ப்பட்டது இந்த நாளில் தான்.அடுத்த சில நாட்களில் நபியின் மரணம் நிகழ்கிறது.

புதன்கிழமை குறித்த வேறுசில நம்பிக்கைகளும் முஸ்லிம்களிடம் இருக்கின்றன. ஐயூப்(யோபு) எனப்படும் இறைத்தூதர் தொழுநோயால் மிகவும் சிரமப்பட்டார். அவருக்குத் தொழுநோய் அறிகுறிகள் தென்பட்டது புதன்கிழமை என்னும் நம்பிக்கை இருக்கிறது.

உடலில் இரத்தம் வெளியேறும் சிகிட்சைகளை புதன்கிழமை மேற்கொள்ளக்கூடாது என்பது மற்றொரு நம்பிக்கை.

 உலகில் பல்வேறு சமூகங்கள் இறை தண்டனையால் அழிந்தன என்றும் அவை அழிந்தநாள் புதன்கிழமை என்பதும் மற்றொரு நம்பிக்கை.

 நோயற்ற வாழ்வை யார்தான் விரும்ப மாட்டார்கள். அதிலும் நபிகள் படுக்கை யில் வீழ்ந்தது புதன்கிழமை எனும்போது அந்த நாளை நோய் நிவாரணம் தேடும் நாளாக முஸ்லிம் பண்பாட்டுலகம் எடுத்துக் கொண்டது.

 இன்றைய. நாளில் கட்டாயம் குளிப்பது என்னும் வழக்கத்தைக் கொண்டிருக் கிறார்கள். தொழுகை செய்கிறார்கள். திருக்குர் ஆன் எழுத்துக்களை வாழை இலை, பீங்கான் தட்டுக்களில் எழுதி அருந்து கிறார்கள். நோயற்ற வாழ்க்கைக்காக சிறப்புப் பிரார்த்தனை செய்கிறார்கள்.

 தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் கடல்பகுதிகளை சார்ந்து வாழ்கிற முஸ்லிம்கள் கடலுக்கு செல்கிறார்கள், வீட்டில் மீன் சமைத்து உண்ணு கிறார் கள்.ஏழைகளுக்கு உணவளிக்கிறார்கள்.

இவ்வாறு கடலுக்கு செல்வதை கடல்குளிப்பு என்கிறார்கள். அங்கே ஏதேனும் இறைநேசர் சமாதி இருந்தால் அந்த இடத்தை தங்களின் வருகையால் மரியாதை செய்கிறார்கள்.

கடல் இல்லாத வட்டாரத்தில் வாழ்பவர்கள் அருகிலிருக்கும் ஆற்றங்கரைகளுக்குச் செல்கிறார்கள்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0