ஒடுக்கத்துப்புதன், ஒடுக்கத்து வெள்ளி, ஒடுக்கு பூஜை, ஒடுக்கத்து வீடு, ஒடுக்கு நாள் - ஒடுக்கம் என்னும் சொல்கொண்டு எத்தனை வெளிப் பாடுகள்

 0
ஒடுக்கத்துப்புதன், ஒடுக்கத்து வெள்ளி, ஒடுக்கு பூஜை, ஒடுக்கத்து வீடு, ஒடுக்கு நாள் - ஒடுக்கம் என்னும் சொல்கொண்டு எத்தனை வெளிப் பாடுகள்

முஸ்லிம்களின் பண்பாட்டு வாழ்வில் இன்றைய புதன் கிழமையை ஒடுக்கத் துப்புதன்என்கிறார்கள்.

 

இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர்படி இரண்டாவதாக அமையும் மாதம் ஸபர். இந்த மாதத்தின் கடைசி புதன் கிழமையை ஒடுக்கத்துப்புதன் என்று தமிழ் பேசும் முஸ்லிம்கள் குறிப்பிடுகிறார்கள்.

 

 

 

இந்த நாள் சார்ந்து சில பண்பாட்டு நடவடிக்கைகளையும் அவர்கள் மேற் கொள்கிறார்கள்.இந்த நடவடிக்கைகள் நோயிலிருந்து நிவாரணம் பெறுவ தோடு தொடர்புடையது. நபி முஹம்மது அவர்கள் இறுதியாக நோய்வாய்ப்பட்டது இன்றைய நாளில் என்பதிலிருந்து ஒடுக் கத்துப்புதன் என்னும் கருத்தாக்கம் உருவாகிறது.

 

ஒடுக்கம்மிகப்பழமையான தமிழ்ச் சொல். சங்க இலக்கியங்களில் இருந்தே எடுத்தாளப்படும் சொல். கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றிஎன்னும் தொடரொன்று மதுரைக் காஞ்சியில் (642) வருகிறது.மறைதல்என்னும் பொருளினை இப்பாடலில் இடம் பெற்றுள்ள ஒடுக்கம் தருகிறது. கண்களை விட்டும் சட்டென மறைந்து விடும் திருடர்களைக் கண்டறிதல் என்பது பாடலின் பொருள் .

 

அடக்கம், பணிவு,மறைவு, பதுங்குதல், ஒடுங்குதல் என்னும் அர்த்தங்களைக் கொண்டது இந்த சொல் அடக்க ஒடுக்கம், அடங்கி ஒடுங்குதல் போன்ற சொல் லாடல்கள் நம்முடைய பயன்பாட்டில் இருக்கின்றன. அடக் கம் அமரருள் உய்க்கும்என்று திருக்குறள் குறிப்பிடு கிறது எனினும் அடக்க ஒடுக்கம் என்னும் தொடர் இளம்பெண் குறிப்பாக திருமணமாகாத இளம்பெண்ணைக் குறித்து நிற்கும் சொல்லாக மரபுவழி பயன்படுத்தப் பட்டும் வருகிறது

 

புதுவை போல் நின்வரவும் இவள்

வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே

என்று கலித்தொகைப்(52;24,25)

 

பாடலொன்று குறிப்பிடுகிறது. இந்தப் பாடலில் அடக்கம் என்னும் பொருளைத் தருவதாக ஒடுக்கம் எடுத்தாளப் பட்டுள் ளது .

ஒடுக்கம் என்னும் சொல்லை பதுங்கு தல் என்னும் பொருளில் திருவள்ளுவர் கையாள்கிறார்

.

ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து (486)

 

வலிமையான அரசனாக இருந்தாலும் எதிரியுடன் போர் செய்யும் தக்கக் காலத் திற்குக் காத்திருக்க வேண்டும். இந்தக் காத்திருப்பை எதிரி மீது பாய்வதற்கு தன்னைத் தயார்படுத்திக்கொள்ள பதுங்கும் காளையுடன் ஒப்பீடு செய் கிறார். இங்கு ஒடுக்கம் காலத்துடனும் பதுங்கு தலுடனும் தொடர்புடையதாக இருக்கிறது.

 

அடங்கி ஒடுங்குதல் என்னும் சொல் ஒடுக்குமுறை யோடும், துறவோடும் தொடர்புடைய ஒன்றாக இருக் கிறது. சமண மரபில் இந்த ஒடுக்கநிலை துறவுடன் நெருக்கமானதாக இருந்தது.

 

உண்ணாமல்,பருகாமல்உயிரும் ,புலனும் ஒடுக்கம் ஆகுதல் சமணத்தில் முக்கி யமான ஒன்று. நம்முடைய பழங்கால வீடுகளில் சுவரில் இருந்த மாடக்குழி களும் அதில் ஏற்றிவைத்த எண்ணெய் விளக்குகளும் இத்தகைய உயிர் ஒடுக்க மான முன்னோர் மரபை நினைவுகூறி நின்றன. மறைவான என்னும் பொருளையும் ஒடுக்கம் தருகிறது.

 

ஒடுக்கமுள்ளோ னேயுனக் கூணுறக்க மற்றோய்

 

என்று இறைவனை தக்கலை பீர் முஹம்மது அப்பா ஞானப்புகழ்ச்சியில் (491) குறிப்பிடுகிறார்.மறைவான என்னும் பொருளை இங்கு ஒடுக்கம் தருகிறது.

 

வேறோரிடத்தில் கடைசி /இறுதி என்னும் பொருளிலும் ஒடுக்கத்தை பீர்முஹம்மது அப்பா பயன்படுத்துகிறார்.

 

மறுமை நாளில் கடைசியாக இறைவன் தனக்குத்தர இருக்கின்ற அனைத் தையும் இப்போதே தாவென்று கேட்கும் இடத்தில் கடைசி என்னும் சொல்லுக்கு இணையாக ஒடுக்கம் என்னும் சொல் லை எடுத்தாள்கிறார்.

 

சக்கரவொ டுக்கமி லெனக்குற விரங்கிநீ

தரும்படி நினைத்துள தெல்லாம்” (ஞானப்புகழ்ச்சி.226)

 

இலக்கியங்களில் தத்துவ நிலைகளில் அதிகம் பயன் படுத்தப்படும் ஒடுக்கம் என்னும் சொல் கேரளத்தில் இயல்பான பேச்சில் இடம்பெறுகிறது. இச்சொல் மலையாள மொழிக்கும் உரிய ஒன்றாக உள்ளது. பின்னர்/ பிறகு என்னும் பொரு ளில் இச்சொல் பயன்பாட்டில் இருந் தாலும் பெருமளவில் கடைசிஎன்னும் பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.

 

மலையாள செல்வாக்கின் காரணமாக குமரி மாவட் டத்தில் குறிப்பாக கல்குளம் விளவங்கோடு வட்டா ரங்களில் ஒடுக்கம் என்னும் சொல் கடைசி என்னும் பொரு ளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

பெரும்பாலான கோவில் வழிபாடுகளில் ஒடுக்கு பூஜை இருக்கிறது. குமரி மாவட் டத்தின் புகழ்பெற்ற திருத் தலமான மண்டைக்காட்டு பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் போது நடை பெறும் கடைசி பூஜை ஒடுக்கு பூஜை என்று அழைக்கப்படுகிறது. எட்டாம் கொடை அன்று நள்ளிரவில் இந்த பூஜை நடைபெறும்.

 

கிழமைசார்ந்த பயன்பாட்டில் மாதத்தின் கடைசி வெள் ளிக்கிழமை என்பதை ஒடுக்கத்து வெள்ளி என்று அழைக்கும் வழக்கம் இருந்தது. இன்று கடைசி செவ் வாய், கடைசி சனி,கடைசி ஞாயிறு என்று அழைக் கப்படும் சொற்கள் ஒடுக் கம் என்னும் சொல் கொண்டே முன்பு அழைக்கப்பட்டது.

 

குமரிமாவட்ட மக்கள் பேச்சு வழக்கில் ஒடுக்கம் என்னும் சொல் இறுதி/ கடைசி என்னும் பொருளில் எரிச்சலும் கோப மும் சார்ந்ததொனியில் அதிகம் பயன் படுத்தப்பட்டு வருகிறது. ஒடுக்கத்த உறக்கம், ஒடுக்கத்தப் போக்கு, ஒடுக்கத் தப் பேச்சு, ஒடுக்கத்த சிரி, ஒடுக்கத்தத் தீத்தி, ஒடுக்கத்த சாயா , ஒடுக்கத்த ரோடு, ஒடுக்கத்த குளி, ஒடுக்கத்த பாட்டு, ஒடுக்கத்த விளையாட்டு, ஒடுக்கத்த ஓட்டம் , ஒடுக்கத்த நடை , ஒடுக்கத்த படிப்பு, ஒடுக்கத்த சினிமா, என்று எரிச்சல் ,கோபம் சார்ந்த இடங்களில் எல்லாம் ஒடுக்கம் என்னும் சொல் முன்னொட்டு சொல்லாக பயன் படுத்தப்பட்டு வருகிறது.

 

கேரளம் , குமரிமாவட்டப் பகுதிகளில் கடைசி என்னும் பொருளில் பயன் படுத்தப்படும் ஒடுக்கம் என்னும் சொல் தமிழ் பேசும் முஸ்லிம்களின் பண்பாட்டுச் செயல் பாட்டின் சொல்லாகஒடுக்கத்துப்புதன்என்று மாறியது எப்படி என்பதுதான் தெரியவில்லை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0